பதிவு செய்த நாள்
02
மார்
2016 
10:03
 
 திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஒரே நாளில், உண்டியல் மூலம், 3.69 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களால் இயன்ற காணிக்கையை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பக்தர் வருகை குறைவாக இருக்கும் சமயத்தில், உண்டியல் காணிக்கை மட்டும் அதிகளவில் வசூலாகும். ஆண்டு கணக்கு முடிவு, வருமான வரி கணக்கீடு உள்ளிட்ட காரணங்களால், கூடுதல் காணிக்கைவசூலாகும். பக்தர் வருகை குறைவாக இருந்த, நேற்று முன்தினம், 3.69 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்ததாக, தேவஸ்தானம் தெரிவித்தது.