திருப்புவனம்: திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் திருப்புவனம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமமக்கள் பலரும் அக்னி சட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்தி செலுத்துவர். இந்தாண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி யளித்தார். செண்பக பட்டர், பாபு பட்டர் கொடியேற்ற வைபவத்தை நடத்தினர். தேவஸ் தான கண்காணிப்பாளர் செந்தில், திருப்பணிக் குழுவினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.