திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2016 11:03
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியோற்றத்துடன் துவக்கியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த நளபுரநாயகி ஸமேத நளநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கியது. பிரம்மோத்ஸவ விழா நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.இன்று காலை நித்திய பூஜை ேஹாமம் திருமஞ்சனம்,மாலை நித்திய பூஜை ஹோமங்கள் பலிப்ரதானம் ஹம்ஸ வாஹனத்தில் நாச்சியார் திருக்கோலம் திருவீதி புறப்பாடு.4ம் தேதி சேஷவாஹனத்தில் வைகுந்தநாதர் சேவை,5ம் தேதி கருடசேவை, 6ம் தேதி திருத்தேர் நளநீர்த்தத்தில் தீர்த்தவார மாலை திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.