பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
திருப்பூர் : முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், மகா சிவராத்திரி விழா, வரும், 6ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவராத்திரி தினமான, 7ம் தேதி இரவு, 8:00க்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை நடைபெறும். தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், நந்தீஸ்வரன் அழைத்தல், வெற்றிலை பாக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு, 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா சிவராத்திரி தேவேந்திர பூஜை, முகம் எடுத்து ஆடும் நிகழ்ச்சி; 8ம் தேதி, அதிகாலை 3:00க்கு, மயான பூஜை, வல்லான கண்டனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி; 9ம் தேதி அதிகாலை, 5:00க்கு, சக்தி விந்தை அழைப்பு (அலகு தரிசனம்), அம்மன் தங்க கவச அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, 13 வரை, தினமும் காலை, 10:00 மணிக்கு, வாகனங்களில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.