பதிவு செய்த நாள்
04
மார்
2016
10:03
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 76வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை, 8:00 மணிக்கு, பெற்றோரின் படங்களை அடிகளார் வழிபட்டார். மலர் அலங்கார ரதத்தில், அவரை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின், பங்காரு அடிகளார் பிறந்த நாள் கேக் வெட்டினார்; சிறப்பு அலங்கார மேடையில் அமர்ந்து, செவ்வாடை பக்தர்களுக்கு அருள் தரிசனம் கொடுத்தார். விழாவில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.