பால சுப்பிரமணிய சாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2016 11:03
சத்திரப்பட்டி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சத்திரப்பட்டி பால சுப்பிரமணிய சாமி கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதேபோல் சமுசிகாபுரம், வ.உ.சி., நகர் மற்றும் கீழராஜகுலராமன் சுற்று பகுதி கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.