பதிவு செய்த நாள்
23
ஆக
2011
11:08
கீழக்கரை : கீழக்கரை அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்சவம் கோலாகலமாக நடந்தது.கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் துவங்கியது. மாணவர்கள் சதீஸ்குரு, கவுதம், கோகுல் இணைந்து வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்றனர்.இதைதொடர்ந்து சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்.செல்வராஜ் தலைமையில் கயிறு இழுக்கும் போட்டியும், கேரளா செண்டிமேளம் முழக்கத்துடன் கண்ணபிரான் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. சோ.ப.ரங்கநாதன், ஓய்வு உறியடி உற்சவத்தை துவக்கி வைத்தனர். ஏ.எம்.தட்சிணாமூர்த்தி உறியடித்தார். யாதவர் சங்க பொருளாளர் கணபதி தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.விழா கமிட்டியாளர்கள் அரிதாஸ்,தட்சிணாமூர்த்தி,யாதவ சங்க தலைவர் சாமி,வி.ஏ.ஓ.க்கள் (ஓய்வு)முருகேசன்,மலைமேகம்,ஹரிதா பவுண்டேசன் இயக்குனர் இன்ஜினியர் கர்ணன், மாவட்ட வி.ஏ.ஒ.,சங்க துணை செயலாளர் பாலையா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க.,செயலாளர் ராமலிங்கம், கீழக்கரை வர்த்தகர்கள் சண்முகராஜன், சுந்தரம், ராமர்,அன்பரசன், முத்து, வீரையா, சபரிகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் கிரு ஷ்ண ஜெயந்தி உறியடி விழா நடந்தது. வக்கீல் கேசவன், பாலமுருகன், சேகர், தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.