பதிவு செய்த நாள்
09
மார்
2016
01:03
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு, பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில், 1,008 சிவலிங்க பூஜை கூட்டு வழிபாடு நடந்தது. திருச்செங்கோட்டில், மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில், குமரமங்கலம் பாண்டீஸ்வரர் திருக்கோவில்களில் சிறப்பு அலங்காரபூஜை வழிபாடு நடந்தது. தர்ம ரக் ஷண ஸமிதியின் சார்பாக, பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில், 1,008 சிவலிங்க பூஜை கூட்டு வழிபாடு நடந்தது. ஜான்சன்ஸ் நடராஜன், தர்ம ரக் ஷண ஸமிதியின் தலைவர் ராஜேஸ்வரன், வித்யா விகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். சிவ சகஸ்ர நாமபூஜையை நகர்மன்ற தலைவர் சரஸ்வதி துவக்கி வைத்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.