பதிவு செய்த நாள்
09
மார்
2016
03:03
மனதில் நினைப்பதை எளிதில் வெளியிடாத கடக ராசி அன்பர்களே!
குரு, சுக்கிரன், புதன் நற்பலன் கொடுப்பர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். குருவால் பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பொருள் சேரும்.
வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 30,31, ஏப். 1ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் மிகுந்த வளர்ச்சி அடையும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கும். பெண் ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி, பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு தற்போது உள்ள பின்தங்கிய நிலை படிப்படியாக மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நல்ல பணவரவு கிடைக்கும்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகளில் வெற்றி பெற நல்ல நேரம் வரும் என காத்திருந்தவர்களுக்கு மார்ச் 30க்கு பிறகு புதன் சாதகமாக வருகிறார். இதனால் போட்டிகளில் வெற்றி காணலாம். குருவின் பலத்தால் ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
விவசாயம் சீராக நடக்கும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களுக்கு அக்கம் பக்கத்தினருடன் சிறு பிரச்னைகள் மாத ஆரம்பத்தில் வரலாம். பொறுமையுடன் , விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மார்ச் 23,24ல் புத்தாடை, நகை வாங்கலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: மார்ச் 14,15,18,19,20,23,24,30,31, ஏப். 1,2,3,8,9,10,11
கவன நாள்: ஏப். 4,5-சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,4
நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: காலையில் சூரியனை வணங்கினால் பிரச்னைகள் மறையும். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி தானம் செய்யுங்கள். நரசிம்மரை வணங்குவதுடன் பசுமாட்டிற்கு பசுந்தழை போடுங்கள்.