Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: நட்புணர்வுடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே! மேஷம்: நட்புணர்வுடன் பழகும் மேஷ ராசி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அதிர்ஷ்டம் அள்ளித் தரும்!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அதிர்ஷ்டம் அள்ளித் தரும்!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
04:03

லட்சிய நோக்குடன் பணியாற்றும் மீன ராசி அன்பர்களே!

ராகுவின் நற்பலன் மாதம் முழுவதும் கிடைக்கும். சுக்கிரன் ஏப். 1ல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் ஏப்.1 க்கு பிறகு தடை அனைத்தும் விலகும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்னை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு மார்ச் 30 க்கு பிறகு மறையும். ஏப். 1 முதல் அதிர்ஷ்டதேவதை பொன், பொருளை அள்ளித்தருவாள். பெண்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். ஏப். 2,3 ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஏப். 1க்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். மார்ச் 21,22 ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். மார்ச் 30,31 ஏப்.1 ல் எதிர்பாராத முன்னேற்ற சம்பவம் நடக்கும். மார்ச் 30க்கு பிறகு செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம்.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப்.1 க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஓரளவு நற்பலனை எதிர்பார்க்கலாம். மாணவர்கள்  மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்கறையுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும்.

விவசாயத்தில் மகசூல் சீராக இருக்கும். உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகலாம். கால்நடை மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும்.
 
பெண்களுக்கு குதுõகலமான வாழ்வு அமையும். மார்ச் 14,15, ஏப்.10,11ல் ஆடை, அணிகலன் வாங்கி
மகிழ்வர். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்.

நல்ல நாள்: மார்ச் 14,15,21,22,23,24,30,31 ஏப்ரல் 1,2,3,6,7,10,11

கவன நாள்: மார்ச் 25,26,27 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6,8

நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: சூரிய வழிபாடு நன்மை தரும். செவ்வாயன்று காளியம்மனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி காக்கைக்கு அன்னமிடுங்கள். சாஸ்தாவை வணங்கி வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar