பதிவு செய்த நாள்
10
மார்
2016
11:03
ஓமலூர்: தொளசம்பட்டி பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். ஓமலூர் தாலுகா தொளசம்பட்டியில், மிக பழமையான பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த, 23ம் தேதி கம்பம் நட்டு விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மன் சத்தாபரண அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முக்கிய நிகழ்ச்சியாக காலை, 7 மணிக்கு பெரிய மாரியம்மன் கோவில் முன் பக்தர்கள் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வண்டி வேடிக்கை, அலகு குத்துதல், கரகம் எடுத்தல், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. சொட்டையனூர், சோளிக்கவுண்டனூர், பேக்காடு, மணக்காடு, ராமகிருஷ்ணனூர், நெசவாளர்காலனி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.