பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
திருப்பதி: மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருமலைக்கு அங்கபிரதட்சணம் செய்தபடி வருகிறார்.மஹாராஷ்டிர மாநிலம், அமராவதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் ஸ்ரீபாத் தொரத், 54. இவர், ஜனவரி, 20ல், அமராவதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அங்கபிரதட்சணம் செய்தபடி திருமலைக்கு பயணமானார். நேற்று அவர், தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் உள்ள, வரதன்னபேட்டையை அடைந்தார். தினசரி, 10 - 15 கி.மீ., துாரம் வரை, அங்கபிரதட்சணம் மூலம் கடந்து வருகிறார். அவருக்கு துணையாக, அவரது மகன், சைக்கிள் ரிக்ஷாவில் வருகிறார். இன்னும் இரண்டு மாதத்தில் அவர் திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன், 2005 ஜனவரியில் வைஷ்ணவதேவி கோவில்; 2014ல் புட்டபர்த்தியில் உள்ள, சத்ய சாயிபாபாவின் பிரசாந்தி நிலையத்திற்கு அங்கபிரதட்சணம் செய்தபடி சென்றுள்ளார். உலக நன்மைக்காக அவர், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.