பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆரம்பம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2011 10:08
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் பெருவிழா நடைபெறும். நேற்று முன் தினம் மாலை கற்பக விநாயகருக்கு அனுக்ஞை பூஜை,அனுஷ்டாங்க பெருபூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து ஆச்சாரியருக்கு காப்புக் கட்டப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு மூஷிக தேவர் பல்லக்கில் எழுந்தருளினார். கோயிலை வலம் வந்த பின் கொடிமரத்தினருகே உற்சவ விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 10.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அறங்காவலர்கள் ராமனாதன் செட்டியார், சிதம்பரம் செட்டியார் முன் னிலை வகித்தனர். பூஜையை தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரகுருக்கள் செய்தனர்.