திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவில் 5ம் நாள் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி வெவ்வேறு சப்பரங்களில் வீதிவுலா வந்து அருள் பாலிக்கிறார். 5ம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக சிவன்கோயிலில் இரவு சுவாமி குமரவிடங்கபெருமாளும், வள்ளியம்மாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி வீதி உலா வந்தார். திருவிழாவில் இன்று காலை கோ ரதத்திலும் இரவு வெள்ளி ரதத்திலும் வீதி உலா நடக்கிறது. 7ம் திருநாளான 25ம் தேதி அன்று அதிகாலை 4.30-5.30 மணிக்குள் சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மேல் ஆறுமுகபெருமான் வெட்டிவேட் சப்பரத்தில் பிள்ளையான் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார். மா லை 4 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். 8ம் திருநாளான 26ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வெ ள்ளி சப்பரத்தில் வெள்ளைசாத்தி கோலத்திலும் காலை 10.20 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளுகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாளான 28ம் தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுக ளை இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.