சமய குரவர், சந்தான குரவர் ஆகிய சொற்களுக்கு என்ன அர்த்தம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2016 02:03
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகியோர் நால்வரையும் சமய குரவர் என்று சொல்வார்கள். திருக்கயிலை மரபில் வந்தவர்களான நந்தி தேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகியவர்களைச் சந்தான குரவர்கள் என்பார்கள். இந்த நால்வரும் கயிலையில் வாழ்பவர்கள். இவர்களை அகச் சந்தான குரவர்கள் என்று அழைப்பது சைவ மரபு. மெய்கண்டதேவர், அருள்நந்தி, சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகியோர் நால்வரும் மண்ணுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களைச் புறச் சந்தான குரவர்கள் என்று அழைப்பார்கள்.