கிருஷ்ணன் கீதையில் (18-53) இவ்விதம் கூறுகிறார். அகங்காரம் பலத்தால் ஏற்படும் திமிர், செருக்கு, காமம், கோபம், உடைமை ஆகியவற்றைத் துறப்பதே துறவு அதனால் ஒருவர் சாந்தியையும் தெய்வத்திற்கு ஒப்பான நிலையையும் அடைவார். இந்த துறவு இல்லாத துறவு முழுத்துறவு ஆகாது. ஆத்ம சாட்சாத்காரம் என்ற மாளிகைக்குத் துறவுதான் அஸ்திவாரம் துறவியாக இருந்தால் உள்ளும் புறமும் துறந்திருக்க வேண்டும். இல்லறத்தானுக்குப் புறத்துறவு இயலாது, ஆதலால் அவன் புறத்துறவு அமையாவிட்டாலும், உள்ளத்தில் துறந்தவனாக வாழ வேண்டும். எனவே துறவியாக இருந்தாலும் இல்லறத்தானாக இருந்தாலும் - ஆத்மஞானம் பெறுவதற்கு உள்ளத்தில் துறவு கொண்டவராகத் தான் இருக்க வேண்டும்.