வேலாயுதம்பாளையம் : வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அரசு வேம்புக்கு வரும் 1ம் தேதி தெய்வீக திருமண விழா நடக்கிறது. வேலாயுதம்பாளையத்தில் புகழிமலை பாலசுப்பிரமண்ய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புகழிமலை அடிவாரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள மரங்களுக்கு எல்லாம் ராஜா என போற்றப்படும் அரசுவுக்கும், வேம்பரசி என போற்றப்படும் வேம்புக்கும் வரும் 1ம் தேதி தெய்வீக திருமண விழா நடக்கிறது. விழாவுக்கு, "சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு வேம்பு திருமண விழாவுக்கு பொருட்கள், நன்கொடை மற்றும் அன்னதானத்துக்கு தேவையான பொருள் உதவியையை வரும் 30ம் தேதிக்குள் வழங்கலாம் என விழாகுழுவினர் மற்றும் ஸ்ரீ அம்மன் சுய உதவிக்குழு அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.