பெண்ணாடம்: பெண்ணாடம் அங்காளம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்ணாடம் மீனவர் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடந்தது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.