காளியம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 01:01
சிவகங்கை: சிவகங்கை மதுரை முக்கு கல்லுாரி சாலையில் காளியம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் சித்தர் முத்துக்குமார சுவாமி குருபூஜை விழா நடந்தது.
நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. காலை 10:30 மணிக்கு கும்ப அலங்காரம் தீப ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும் நேற்று காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும் கோ பூஜையும் நடந்தது. காலை 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்து தீப ஆராதனை நடந்தது. 10:30 மணிக்கு முத்துக்குமார சுவாமி குருபூஜை மற்றும் அபிஷேக நடந்தது.