சாணார்பட்டி: ராமன்செட்டிபட்டி கன்னிமூல கணபதி,காளியம்மன், பகவதி அம்மன், ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி திருச்செந்துார், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, கொடுமுடி, அழகர் கோவில் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டது.நேற்று முன் தினம் முளைப்பாரி, தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் வைக்கப் பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.