பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக, இன்று துவங்குகிறது. கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழா கிராமசாந்தியுடன் நேற்று துவங்கியது. இன்று, காலை, 11 மணிக்கு மேல், 12.30 மணிக்குள் கொடியேற்று விழா, மாலை, 6.30 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, மார்ச், 16ம் தேதி காலை பல்லாக்கு, மாலை, 6.30 மணிக்கு நந்திவாகனத்தில் அம்பாள் அன்வாகனத்தில் புறப்பாடு, 17ம் தேதி காலை பல்லாக்கு, மாலை, 6.30 மணிக்கு சுவாமி பூத வாகனத்தில், அம்பாள் பூதகி வாகனத்திலும் புறப்பாடு, 18ம் தேதி காலை பல்லாக்கு, மாலை, 6.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி காலை பல்லாக்கு, மாலை, 6.30 மணிக்கு கைலாய வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 20ம் தேதி காலை, 7 மணிக்கு பல்லாக்கில் சுவாமி அம்பாள் சிறப்பு அபி?ஷகம், இரவு யானை வாகனத்தில் புறப்பாடு, 21ம் தேதி காலை, 10 மணிக்கு மேல், 11.15 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருக்கல்யாண உற்சவம், மாலை, 7 மணிக்கு புஷ்ப விமானத்தில் காட்சித்தருதல் நடக்கிறது. வரும், 22ம் தேதி காலை பல்லாக்கு, இரவு சுவாமி குதிரை வாகனத்தில் அம்பாள் பல்லாக்கில் புறப்பாடு, 23ம் தேதி காலை, 6 மணிக்கு மேல், 7.30 மணிக்குள் சுவாமி திருந்தேருக்கு எழுந்தருளல், திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 6 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல், 24ம் தேதி காலை நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம், தரிசனம், தீர்த்தவாரியும், இரவு ரிஷபவாகனத்தில் புறப்பாடு, துவஜாவரோகணமும் நடக்கிறது. மேலும், 25ம் தேதி காலை விடையாற்றி உற்சவம், இரவு ஆளும் பல்லக்கு, 26ம் தேதி உஞ்சல் உற்சவம், 27ம் தேதி பிராயச்சித்த அபி?ஷகம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.