பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
ஊட்டி: குன்னுார் சுப்ரமணிய சுவாமி கோவி லில், மகா சண்டிஹோமம் நாளை நடக் கிறது. குன்னுார் வி.பி. தெரு பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், 2007ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 9ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, நாளை மகா சண்டி ஹோமம் நடக்கிறது. இதை தொடர்ந்து, இன்று மாலை, 6:00 மணிக்கு கலசஸ்தாபனம், சப்தசதி பாராயணம், 64 பைரவர் பலி பூஜைகள் நடக்கின்றன.தொடர்ந்து, நாளை காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை மகா சண்டிஹோமம், சுமங்கலி பூஜை, சப்த கன்னிகா பூஜை, பசு பூஜை, தம்பதி பூஜை, மகா பூர்ணாகுதி, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.