பதிவு செய்த நாள்
15
மார்
2016
02:03
திருமங்கை ஆழ்வார் இமயமலையிலுள்ள திருப்பிருதி எனப்படும் பிரயாகை பெருமாள் பற்றி பாடிய பாடல்கள் இவை. இந்த பாடல்களை பாடி முடிக்க பத்து நிமிடம் தான் ஆகும். ஆனால் கோடி முறை ராம ராம என்று சொன்ன பலன் கிடைக்கும். கொடிய பாவமும் தீர்ந்து போகும்.
வாலிமாவலத்து ஒருவனது
உடல் கெட வரிசிலை வளைவித்து
அன்று ஏலநாறு தண் தடம்
பொழில் இடம்பெற இருந்த
நல் இமயத்துள், ஆலி மாமுகில்
அதிர்தர அருவரை அகடுற முகடேறி,
பீலி மாமயில் நடஞ்செயும் தடஞ்சுனை
பிரிதி சென்றடை நெஞ்சே.
கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய
அருவரையணை கட்டி,
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்
தாம் இருந்த நல் இமயத்து,
விலங்கல் போல் வனவிறல்
அருஞ் சினத்தன வேழங்கள் துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்று அரிய
வைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல்
துளகெயிற்று இளங்கொடி திறத்து ஆயர்
இடிகொள் வெங்குரலின விடை
அடர்த்தவன் இருந்த நல் இமயத்து,
கடிகொள் வேங்கையின் நறுமலர்
அமளியின் மணியறை மிசை வேழம்,
பிடியினோடு வண்டிசை சொலத்
துயில் கொளும்
பிரிதி சென்றடைநெஞ்சே.
மறங்கொளாள் அரியுருவென வெருவர
ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர்மணி முடிபணிதர
இருந்த நல் இமயத்துள்,
இறங்கி யேனங்கள் வளைமருப்பிடந்திட
கிடந்தரு கெரிவீசும்
பிறங்குமாமணி அருவியொடு இழிதரு
பிரிதி சென்றடைநெஞ்சே.
கரைசெய் மாக்கடல் கிடந்தவன்
கனைகழல் அமரர்கள் தொழுதேத்த,
அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்
அமர்ந்த நல் இமயத்து வரைசெய் மாக்களிறு
இளவெதிர் வளர்முளை அளைமிகு தேன் தோய்த்து
பிரசவாரி தன்னிளம் பிடிக் கருள்செயும்
பிரிதி சென்றடைநெஞ்சே.
பணங்கள் ஆயிரமுடைய
நல்ல அரவணை பள்ளிகொள்
பரமாவென்று இணங்கி
வானவர் மணிமுடி பணிதர இருந்த
நல் இமயத்து மணங்கொள் மாதவி
நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசை சொலும்
பிரிதி சென்றடைநெஞ்சே!
கார்கொள் வேங்கைகள் கனவரை
தழுவிய கறிவளர்க்கொடி துன்னி,
போர்கொள் வேங்கைகள் புனவரை
தழுவிய பூம்பொழில் இமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந்து
இனமலர் எட்டுமிட்டு
இமையோர்கள்,
பேர்களாயிரம் பரவி நின்றடி
இரவுகூர்ந் திருள்
பெரு கியவரை
முழை இரும் பசியது கூர,
அரவமாவிக்கும் அகன்
பொழில் தழுவிய
அருவரை இமயத்து,
பரமனாதி யெம்பனி
முகில் வண்ணனென்று
எண்ணி நின்று
இமையோர்கள்,
பிரமனோடு சென்றடி
தொழும்
பெருந்தகைப் பிரிதி
சென்றடைநெஞ்சே.
ஓதியாயிர நாமங்கள்
உணர்ந்தவர்க்கு
உறுதுயர் அடையாமல்,
ஏதமின்றி நின்றருளும்நம்
பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கிய பிண்டி விண்டலர்கின்ற
தழல்புரை எழில் நோக்கி,
பேதை வண்டுகள் அரியென வெருவரு
பிரிதி சென்றடைநெஞ்சே.
கரியமாமுகிற் படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட களிறென்று
பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு
பிரிதி எம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில்
மங்கையர் கலியன தொலிமாலை,
அரிய இன்னிசை பாடு
நல்லடியவர்க்கு அருவினையடயாவே.