பதிவு செய்த நாள்
16
மார்
2016
11:03
மூங்கில்துறைப்பட்டு: வடபொன்பரப்பி முஸ்குந்தா நதிக்கரையில் புதியதாக கட்டப்பட்ட சுப்ரீஸ்வரர் சுவாமிக்கு அஸ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி முஸ்குந்தா நதிக்கரையில் புதியதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீ சுப்ரீஸ்வரர் சுவாமிக்கு அஸ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 ந்தேதி மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் அனுஞ்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், தத்துவாங்க பூஜைகள் நடந்தது. இரவு 10:30 மணிக்குமேல் 11:00 மணிக்குள் வேதபாராயணம், அர்ச்சனை, வேள்வி பூஜைகள், பூர்ணாஹீதி, தீபாராதனை மற்றும் முதற்கால யாகபூஜைகள் நடந்தது.இதனை தொடர்ந்து 11 ந் தேதி காலை 6:00 மணிக்குமேல் இரண்டாம் காலயாக பூஜைகள், நாடி சந்தானம், கலாகர்ஷனம், யாத்திரா தானம், வேதபாராயணம், இரண்டாம் கால மஹா தீபாரதனை காண்பித்து கடம் புறப்பட்டு 10:15 மணிக்கு சுப்ரீஸ்வரர் சுவாமி கோபரத்தில் நன்னீராட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது.