கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றம் சக்திவேல் முருகன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றத்தில் அமைந்துள்ள, சக்தி வேல் முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை பெண்கள் கலந்துக் கொண்ட 108 பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணியளவில் கொடியேற்றமும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது.