அந்தியூர்: அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில், குண்டம் மற்றும் தேர்திருவிழா ஆண்டு தோறும், பங்குனி மாதத்தில் நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா, பூச்சாட்டுதலுடன் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கும். ஏப்., 6ம் தேதி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து, 8ம் தேதி முதல், 11ம் தேதி வரை தேர்திருவிழா நடைபெறவுள்ளது.