வில்லியனுார்: வில்லியனுார் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் வரும் 22ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்வருடத்திற்கான விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று விழாவில் 21ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணமும், 22ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் திருவிழா காலை 8:00 மணிக்கு கோவிலில் இருந்து மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடையும்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் நகர மக்கள் செய்து வருகின்றனர்.