பதிவு செய்த நாள்
18
மார்
2016
12:03
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரம் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 7 மணிக்கு கணபதி ஹோமும், 9 மணிக்கு மேல் கொடி ஏற்றுதலும் நடந்தது. இரவு, 8 மணிக்கு ஆட்டு கிடா வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 21ம் தேதி காலை, 9 மணிக்கு, பால்குடம் ஊர்வலம், மாலை, 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 22ம் தேதி மாலை, 4.30 மணிக்கு விநாயகர் ரதமும், இரவு, 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடக்கிறது. 23ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு மேல், 10 மணிக்குள் பெண் பக்தர்களால் தேர் நிலை பெயர்த்தலும் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹா ரதம் இழுத்தல் நடக்கிறது.