பதிவு செய்த நாள்
18
மார்
2016
12:03
பொன்னேரி : ஆண்டார்குப்பம் பகுதியில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் முடிந்து, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 9:40 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும், காலை, 10:00 மணிக்கு, விநாயகர், பாதாள கங்கையம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும், காலை, 10:15 மணிக்கு, பாலசுப்ரமணிய சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.