பதிவு செய்த நாள்
19
மார்
2016
11:03
பெசன்ட் நகர்: பெசன்ட் நகர், அறுபடை முருகன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், மார்ச் 18ல் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி, யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
மார்ச் 18 காலை, நான்காம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, கருங்கல்லினால் அமைக்கப்பட்ட நுாதன ராஜகோபுரம் மற்றும் எல்லா விமானங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விநாயகர் மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில், திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.