பதிவு செய்த நாள்
21
மார்
2016
11:03
பெண்ணாடம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோவில் முன் மண்டபத்தின் அருகிலுள்ள அதிகார நந்திக்கு நேற்று காலை 9:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு கொடி மரம் அருகிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அ பிஷேகம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிற ப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.