பதிவு செய்த நாள்
26
ஆக
2011
11:08
விழுப்புரம் : விழுப்புரம் சாவி அறக்கட்டளை சார்பில் வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாவி அறக்கட்டளை சார்பில் விழுப்புரம் -புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் பிரின்ஸ் சோமு, மணி, சியாம் சுந்தர், மதன், திருமலைவாசன், டாக்டர் சச்சிதானந்தன், மேலாளர் சரவணன், தன்னார்வ தொண்டர்கள் ஜேம்ஸ், கமல், வாசன், சுரேஷ், ஆன்டோ, தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.