பொதுவாக, பலவிதமான திரவியங்களை வைத்து ஹோமம் செய்கிறோம். பசுஞ்சாணத்தால் தட்டப்பட்ட வரட்டியை வைத்து ஹோமம் செய்கிறோம். இவை புனிதமானவை. இவற்றை வைத்து ஹோமம் செய்த சாம்பலை சுத்தமான விபூதியுடன் கலந்து, அதை இட்டுக் கொள்வது விசேஷம். சாஸ்திரங்களில், அக்னி முகாவை சர்வா தேவதா, என்று, ஹிந்து மதத்தில் எந்த தெய்வத்தையும் அக்னி முகமாகத் தான் வழிபட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அக்னி பகவான் ஹிந்துக்களுக்கு பொதுவான தெய்வம். இதில் வைணவம் என்றோ, சைவம், சாக்தம், என்றோ, வட இந்தியர், தென் இந்தியர் என்றோ பாகுபாடு கிடையாது. விக்ரஹ நிலை என்பது அடுத்த நிலை, அக்னி முகமாக வழிபட்ட தெய்வப் பிரசாதம் என்று எதை எடுத்துக்கொள்ள முடியும். அக்னியில் மிஞ்சக்கூடிய சாம்பலைத்தானே ஆனால், அந்த ஹோமம் என்பது சாஸ்த்ரோக்தமான, சாத்வீகமான ஹோமமாக இருக்க வேண்டும். துர்தேவதைகளின் வழிபாட்டுக்கு உரியவைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.