குழந்தைகளுக்குச் சோறுõட்டக் கூட சந்திரனைத் தான் தாய்மார்கள் துணைக்கு அழைப்பர். அந்த சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால் பங்குனி மாத பவுர்ணமியன்று, மீனராசியில் பூமி இருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து கொள்வார். இத்துடன் ஏழாம் இடமான கன்னியில் நின்று முழு கலையையும் பெற்று பூமிக்கு மிகுந்த பிரகாசத்தை தருவார். இத்தகைய களங்கம் இல்லாத ஒளி உடலுக்கும் மனதிற்கும் சுகத்தையும், நிம்மதியையும் தரும். பல நற்பலன்களைக் கொடுக்கும். இதன் காரணமாகத்தான், சாஸ்தா கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் வெட்டவெளியில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். சந்திரன் இந்த நாளில் மட்டும் ஏன் களங்கமற்று ஒளிர்கிறான் என்ற ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. அவற்றைக் கண்ட மகிழ்ச்சியில் சந்திரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறான். அது மட்டுமின்றி சந்திரனுக்கும் இது திருமண நாள். அவள் தட்சனின் 27 புதல்விகளை இந்நாளில் திருமணம் செய்தான். அத்தனை பெண்களும் அவனை விரும்பி மணம் முடித்தனர்.