பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் லபங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டாள் -ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதியுலா நடந்தது. 9ம் திருநாளான நேற்று, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை செப்புதேரோட்டம் நடந்தது. பின் கோட்டைதலைவாசல் ரேணுகாதேவி கோயிலிலிருந்து, திருக்கல்யாண பட்டுபுடவை, வேஷ்டிகள், திருமாங்கல்யம் ஆகியவை ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வரபட்டது. மதியம் 3 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் இல்லத்தில் பெரியாழ்வார் எழுந்தருளி,தேங்காய் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. பின் ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு, மாலை மாற்றுதல் நடந்தது. இரவு 6.30 மணிக்குமேல் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம், ஆடிப்பூர மண்டபத்தில் நடந்தது. பத்ரிநாராயண பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் திருக்கல்யாண விருந்து நடந்தது.
திருப்பதி சீர் வருகை: ஆண்டாள் திருகல்யாணத்தை முன்னிட்டு, திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து ஆண்டாளுக்கு கல்யாண சீராக பட்டுபுடவை, மாலைகள் ஆகியவைகளை திருமலை கோயில் உதவி நிர்வாக அலுவலர் சின்னமஞ்சரிரமணா தலைமையில் பட்டர்கள் கொண்டு வந்தனர். இதனை ஆண்டாள்கோயில் செயல்அலுவலர் ராமராஜா, பட்டர்கள் பெற்றுகொண்டனர்.