பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
திருக்கோவிலுார்:திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம மகா கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. திருவண்ணாமலை, செங்கம் சாலை, அக்ரகாரக் கொல்லையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜ் ஆசிரமம் அமைந்துள்ளது. ஆசிரமத்தை முழுவதுமாக புனரமைத்து, நாளை, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. காலை, 7:00 மணிக்கு, கணபதி, நவக்கிரக, வாஸ்து ஹோமங்களும், மாலை, 5:00 மணிக்கு, முதல் கால பூஜை, ஜபம், ஹோமங்களும் நடந்தன. இன்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. முன்னதாக, இன்று மாலை, 5:00 மணிக்கு, கும்பாபிஷேகம் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, ஜஸ்டிஸ் அருணாச்சலம் எழுதிய புத்தகத்தின் இந்தி மொழிபெயர்ப்பு நுால், பஜனாமிர்தம் யோகி ராம்சுரத்குமார் பாடல் தொகுப்பு, அருணை வாழ் அற்புதம் சிடி வெளியிடப்படுகிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, கடம் புறப்பாடாகி, காலை, 6:15 மணிக்கு மேல், 7:15 மணிக்குள், பகவான் மகாலிங்கத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு, மகன்யாச பூர்வக அஷ்டோத்திரசத கலச மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் ஆசிரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.