தியாகதுருகம்: தியாகதுருகம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிலை சர்வஅலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் காவடி துாக்கி, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். அதேபோல் புக்குளம், முடியனுார், வரஞ்சரம், கணங்கூர், ஈயனுார், குடியநல்லுார் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.