பதிவு செய்த நாள்
25
மார்
2016
11:03
மயிலம்: மயிலம் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், கடந்த 14ம் தேதி, பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. 21ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 22ம் தேதி, தேர்த் திருவிழாவும் நடந்தது.நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. 12:30 மணிக்கு, உற்சவர் மலைக்கோவிலிருந்து, மலை அடிவாரத்திலுள்ள குளக்கரைக்கு அழைத்து வரப்பட்டார். அதிகாலை 1:05 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, அக்னி குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பலில் அமர்ந்த கோலத்தில், மூன்று முறை வலம் வந்தார். இன்று(25ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்துள்ளார்.