சுவாமி சிலைக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2016 01:03
அம்மன் சிலைக்குக் கீழ்தான் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்தது. மையம் முதல் வெளிக்கோடுகள் வரை ஒன்பது சுற்றுக்களை உள்ளடக்கியதால் நவாவரணமாகவும், நவசக்திகளாகவும் விளங்குகிறது. ஏராளமான தேவதைகளையும், மந்திரங்களையும் கொண்டது. இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. இதை குருமுகமாக உபதேசம் பெற்று அறிந்து கொள்ளலாம். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீசக்கரத்தை அம்பாளின் கீழ் பிரதிஷ்டை செய்வதால், அந்த அம்மனின் சக்தி அதிகரித்து நமக்கு வேண்டிய வரங்களை கிடைக்கச் செய்யும்.