தினமும் புத்தம் புதிதாய் காலைப் பொழுது புலர்கிறது. அதை இனிமையாக்க, கவுசல்யா சுப்ரஜா.... எனத் தொடங்கும் வெங்டேச சுப்ரபாதம் ÷ கட்கிறார்கள். சுஎன்றால் நல்ல. பிரபாத் என்றால் காலை. சுப்ரபாதம் என்றால் நல்ல காலைப் பொழுது. இதனை எழுதியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா. திருமலை திருப்பதியில் சுப்ரபாத சேவையின் போது 70 ஸ்லோகங்களைப் பாடுவர். முதல் 29 ஸ்லோகங்களில் வெங்கடேசப் பெரு மாளை பள்ளியில்(உறக்கத்தில்) இருந்து எழுப்புவர். பின்னர் 11 ஸ்லோகங்களால் ஆன வெங்கடேச ஸ்தோத்திரம் சொல்லி வணங்குவர். பின், வெங்கடேச பிரபத்தி என்னும் 16 ஸ்லோகங்களால், பெருமாளின் திருப்பாதங்களைச் சரணடைவர். இறுதியில், பெருமாளின் புகழை ம ங்களாசாசனம் என்னும் 14 ஸ்லோகங்களால் போற்றுவர். இந்த ஸ்லோகங்களுக்கு சக்தி அதிகம் என்பதால் தான், திருப்பதி நகரில் தினமும் பக்தர்கள் ஏராளமாக கூடுகின்றனர். ஊரே திரு விழாக்கோலம் பூண்டுள்ளது என்பர்.