பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
அவிநாசி: அவிநாசி கோவில் நுழைவாயில் மண்டபத்துக்கு வண்ணம் தீட்டப்பட்டு, பொலிவு பெற்றுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்வதற்கு, பெருமாள் கோவில் அருகே நுழைவாயில் நடை மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில், திருப்பணி நடைபெற்று, பல ஆண்டுகள் ஆனதால், பல இடங்களில் சிமென்ட் உதிர்ந்தும், வண்ணம் மங்கியும் காணப்பட்டது. இதுகுறித்து, பக்தர்கள், கோவில் நிர்வாகத்துக்கு தெரியப் படுத்தினர். இதையடுத்து, நடை மண்டபத்தில், மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலையுண்ட பாலகனை மீட்கும் காட்சி, பார்வதி ÷ தவி வலப்பாகம் பெறுதல் உள்ளிட்ட காட்சிகளை சித்தரிக்கும் சுதைகளுக்கு, வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. செயல் அலுவலர் அழகேசன் கூறுகையில், “கோவில் நடை மண்டபத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாளில் அனைத்து பணிகளும் முடிவுற்றபின், சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி, நடைமண்டபம் புதுப்பொலிவு பெற்றுள்ளது,” என்றார்.