திட்டக்குடி : போத்திரமங்கலம், நெய்வாசல் கிராமங்களில் நடந்த தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் பச்சையம்மன் கோவில், நெய்வாசல் பூமாலையப்பர் கோவில்களில் கடந்த 19ம் தேதி திருவிழா துவங்கியது. 26ம் தேதி காலை தீ மிதி விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். மாலை அம்மனும், சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். போத்திரமங்கலத்தில் நடந்த தீ மிதி திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட பக்தர்களும், நெய்வாசலில் நடந்த தீமிதி திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்களும் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.