உலகளந்த பெருமாள் கோவில் உற்சவம் முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2011 11:08
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் மகோற்சவத்தை முன்னிட்டு முத்துப்பல்லக்கில் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலன் சுவாமி வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் மகோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று முன்தினம் மதியம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு தங்க பல்லக்கில் வீதியுலாவும், 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ராஜகோபாலன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இன்று காலை திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி உத்தரவின் பேரில் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.