விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2016 11:04
விருதுநகர்:விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று நடந்தது. ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். இக்கோயில் பங்குனிப் பொங்கல் விழா மார்ச் 27 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அம்மன் வாகனங்களில் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு அடுப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள். நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு முன் நாட்டுக்கோழி குழம்பு, கருவாட்டுக் குழம்பு, கொழுக்கட்டை என செய்து மண்சட்டியில் சமைத்து அம்மனுக்கு படைப்பர். அதன்பின் விரதத்தை முடித்துவிட்டு கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி நேர்த்திக்கடனை செலுத்துவர்.