குறிச்சி: சுந்தராபுரம் கஸ்துாரி நகரை அடுத்துள்ள பதிவாளர் காலனியில், கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனருகே, விநாயகர், முருகன் கோவில் அமைக்கப்பட்டது.இங்கு கிருஷ்ணர் சிலை, நேற்று முன்தினம் மாலை வைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ஈச்சனாரி சிவஸ்ரீ சிவாச்சாரியார், சுந்தரர்ராஜன், ரவி பட்டாச்சார்யர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.