பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, வீரராகவர் கோவிலில், உற்சவர், மாடவீதி புறப்பாடு நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஐந்து நாட்களாக பல்லவ உற்சவம் நடைபெற்றது. தினமும் ஸ்தலபுராண படலம், ஏழு திரை திறத்தல், பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று, பஞ்சபர்வம் - ஏகாதசியை முன்னிட்டு, காலை 9:30 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. உற்சவர் மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணியளவில் நடந்தது. சிவ - விஷ்ணு கோவில் ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவில் ஜலநாராயணர் சன்னிதியில், நேற்று காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், மதியம், 11:00 மணியளவில், மகா தீபாராதனையும் நடந்தது.