பதிவு செய்த நாள்
06
ஏப்
2016
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. மாதமிருமுறை வரும் பிரதோஷ நாட்கள், சி வபெருமானுக்கு உகந்த நாளாக போற்றப்படுகிறது. அந்நாட்களில், மாலை, 4:30 மணியிலில் இருந்து, 6:00 மணி வரை பிரதோஷ காலமாகும். பிர தோஷ நாளான நேற்று மாலை, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், ஜலத்தூர் அய்யன் கோவில், பட்டணம் சிவன் கோவில், தேவம்பாடி வலசு அம்மணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிவன், அம்மன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. சுவாமி திருவீதி உலாவும் இடம்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.