அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2016 10:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள், வெவ்வேறு வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 15 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை நடந்தது. பெண்கள் விரதமிருந்து கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 9 ம் நாளான இன்று அதிகாலையில் நடந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடன்செலுத்தினர்.