விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம், மணவாளநல் லுார் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஆய்வர் சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், கோவில் பணியாளர்கள் என 75 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 964 ரூபாய், 35.100 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உண்டியல் வருமானம் 11 லட்சத்து 30 ஆயி ரத்து 94 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.