யுகாதி பண்டிகை: திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதிக்கு மாலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2016 12:04
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் இருந்து, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, திருப்பதிக்கு நான்கு டன் பூ மாலைகள் அனுப்பி வைக்கபட்டன. ஆந்திரா மாநிலம், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஆண்டுதோறும் நடக்கும் யுகாதி தெலுங்கு வருட பிறப்பு சிறப்பு பூஜைக்கு, திருச்செங்கோடு அகரமஹால் திருமண மண்டபத்தில், நான்கு டன் எடையுள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். நேற்று மாலை, 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லாரிகள் மூலமாக திருமலைக்கு மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டன.